Monday, November 29, 2021

இதையும் படிங்க

கொரோனாவும்..காற்று மாசுபாடும்…!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவர்களில் 15 சதவீதம் பேருக்கு காற்று மாசுபாட்டுடன் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் நுரையீரல் பகுதியைதான் அதிகம் பாதிக்கிறது. நுரையீரல்...

வெற்று செல்லா நோய்க்குறி எனப்படும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

எம்மில் நாற்பது வயதைக் கடந்தவர்களில் உடற்பருமன் மற்றும் உயர் குருதி அழுத்த பாதிப்புடன் இருப்பவர்களில் சிலருக்கும் பிறருக்கும் பச்சிளம் குழந்தைகளின் சிலருக்கும் எம்ட்டி...

நமது அன்றாட வாழ்க்கையில் மூலாதார தியானம்

நேரம் கிடைக்கும் பொழுது, அலுவலகம், பஸ்சில் அல்லது காரில் செல்லும்பொழுது கண்களை மூடி உங்களது மனதை, மூச்சை முதுகுத்தண்டின் கடைசி கீழ்ப்பகுதியில் வைத்து...

மாதுளை இலைகளும் மருந்தாகும்..

இருமல், சளி: மாதுளை பழத்தை போலவே, இலைகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுபவை. சளி மற்றும் இருமல் இருந்தால், மாதுளை இலைகளை கொண்டு காபி...

சத்துக்கள் நிறைந்த சோள தோசை

சோளத்தில் பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க...

‘வைட்டமின்-டி’வை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம்?

உயிர்ச்சத்துகளில் வைட்டமின்-டி முக்கியமானது. அதேநேரம் அதிக கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று. வைட்டமின்-டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான...

ஆசிரியர்

செல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்…!

காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல் நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.

அது தற்சமயம் வாட்ஸ்-அப் பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு வந்திருக்கிறது. இது வாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்பதால் அதையே பெயரிலும் வைத்துவிட்டார்கள். எனவே இது வாட்ஸ்-அப் பயன்படுத்துகிற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமாகிறது.

செல்போன் வருவதற்கு முன்பு தட்டச்சு எந்திரத்தில் அதிக நேரம் தட்டச்சு செய்பவர்களுக்கு அனைத்து விரல்களிலும் தேய்மானம் ஏற்பட்டு தசை மற்றும் எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதை ‘ஸ்டெனோகிராபர் தம்ப் டிசார்டர்’ என்று சொல்வது உண்டு. செல்போனில் வாட்ஸ்-அப் போன்ற செயலிகளில் நாம் அதிக நேரம் தொடர்ந்து டைப் செய்து சாட்டிங் செய்கிற போது, நமது கையில் உள்ள விரல்களை அதிக அளவு பயன்படுத்துவதோடு நீண்ட நேரம் தலையை குனிந்த நிலையில் இருக்கிறோம்.

இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படக் கூடும். சிலர் செல்போனில் டைப் செய்வதற்கு ஒரு கையை மட்டுமே பயன்படுத்துவது உண்டு. இதனால் ஒரு கையில் மட்டும் அதிக பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக இரண்டு கைகளாலும் டைப் செய்கிற போது கைகளில் ஏற்படுகிற பாதிப்புகள் சற்று குறைய வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனின் அளவு பெரிதாக பெரிதாக டைப் செய்கிற பகுதி பெரிதாவதால் சற்று சுலபமாக டைப் செய்யலாம். டேப்லெட், லேப்டாப் போன்ற சற்று பெரிய திரையை உடைய கருவிகளை கீழே வைத்து பயன்படுத்தும் போது அதிக அளவு தலையை குனிந்து இருப்பதால் தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் அதிக வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தசைகள், எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி திரைகளை பார்த்து கொண்டிருப்பதால் கண்கள் உலர்ந்து விடுகின்றன. இதுபோன்ற டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளிக்கதிர்களால் தற்காலிக கண்பார்வை குறைபாடு ஏற்படுவதோடு கண் விழித்திரை குறைபாடும் உண்டாகிறது. இரவு நேரங்களில் தூக்கத்தை தவிர்த்து இந்த கருவிகளை பயன்படுத்துவதால் தூக்கக் குறைபாடுகள் மற்றும் நினைவுத்திறன் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

செல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த திறன்களும் குறைகின்றன. மேலும் இதனால் அதிக கோபமும், அதிக மன அழுத்தமும் உண்டாகிறது.

குழந்தை பருவத்தில் இதுபோன்ற டிஜிட்டல் திரைகளை அதிக அளவு பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கவனக்குறைவு, மொழியை கற்றுக்கொள்ளும் திறனில் பிரச்சினை ஏற்படுவதோடு கண்ணில் கிட்டப்பார்வை கோளாறு ஏற்படவும் வழிவகுக்கிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பிரச்சினை ஏற்படவும் காரணமாகிறது. பெற்றோர் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து வருவதோடு, அவர்களை அமைதிப்படுத்துவதற்காக செல்போனை கொடுத்து பழக்கப்படுத்துவதால், நாளடைவில் அவர்கள் அதற்கு அடிமை யாகிவிடும் நிலை உண்டாகிறது.

நன்றி -மாலை மலர்

இதையும் படிங்க

குளிர் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது.

கால்சியம் சத்து குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்!

பெண்களில் சிலர் 30 வயதை தொட்டலே முதுகு வலி, மூட்டுவலி என்கிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடாகும். நம் உடலில் 99 சதவிகிதம் கால்சியமானது கடின திசுக்களாக பற்கள் மற்றும்...

தொடரும் மாரடைப்பை தற்காப்பது எப்படி?

சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார், விவேக் என நம்மைவிட்டு மாரடைப்பால் பிரிந்து சென்ற பிரபலங்கள் சிலருண்டு.  இது ஏதோ நடிகர்களுக்கும், பெரிய பெரிய செல்வந்தர்களுக்கும் மட்டும் வரக்கூடிய ஒன்றல்ல. நம்மில்...

இன்பத்தை கருவாக்கினாள் பெண்…!

ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்தியம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை. ஈர்த்து,...

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்வது எப்படி?

மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு தருவதில்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியா -மேற்கு வங்கத்தில் இடம் பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

இறுதி சடங்கின் போது சடலம் ஒன்றை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தில் 35 பேர்...

இலங்கை அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் நூல் பிரதமரிடம் கையளிப்பு!

“அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் கதை” நூல் அதன் ஆசிரியர் குணபால திஸ்ஸகுட்டிஆராச்சி அவர்களினால் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டது.

புதிய படங்களில் நடிக்க சாய்பல்லவியின் நிபந்தனைகள்..!

தற்போது ஷியாம் சிங்கராய், விராட பருவம் ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்குவர உள்ளன. சாய்பல்லவியின் நடனத்துக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

மேலும் பதிவுகள்

தெதிகம கொடவெஹெர ராஜமஹா விகாரையை புனித பூமியாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

கேகாலை தெதிகம கொடவெஹெர ராஜமஹா விகாரையை புனித பூமியாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்தியாவில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா!

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்து 55 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,...

யாழில் சீரற்ற காலநிலை- 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு!

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிவரையான நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது சூரியராஜ் மேலும் கூறியுள்ளதாவது, “நேற்றுமுன்தினம் முதல் பெய்த...

GSP+வரிச்சலுகை – ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்திக்கின்றார் ஜி.எல். பீரிஸ்!

ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமையினை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்...

மட்டன் மிளகு கறி!

தேவையான பொருட்கள்:மட்டன் – 500 கிராம்காய்ந்த மிளகாய் – 3மிளகுத் தூள் – ஒரு மேசைக்கரண்டிசீரகத்தூள் – ஒரு தேக்கரண்டிபூண்டு – ஒரு முழு பூண்டுஎண்ணை – 5 தேக்கரண்டிவெங்காயம்...

கண்டியில் விபத்து- நீரில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்!

கண்டி- இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மகாவலி கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது குறித்த காரில் பயணித்த மூவரில் இருவர் மீட்கப்பட்டுள்ள...

பிந்திய செய்திகள்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம்!

சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து...

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பாதிப்பு!

இச் சூழ் நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம் மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு :மின்சார துண்டிப்பு இருக்காது!

இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...

இலங்கையில் 2025ஆம் காலப்பகுதியில் பட்டினி நிலைமை ஏற்படலாம்?

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் இலங்கையில் பெரும் பசி, பட்டினி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்துள்ளார். நாட்டின்...

இந்திய பெருங்கடலில் நடை பெற்ற 3 நாடுகளின் போர் ஒத்திகை பயிற்சி!

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளைச் சேர்ந்த கடற்படையினர், தென் அரபிக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டனர். மூன்று நாடுகளைச் சேர்ந்த...

தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும் | பெண் சாமியார் பேட்டி

திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா கூறினார்.

துயர் பகிர்வு