செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கும் முத்திரை

சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கும் முத்திரை

1 minutes read

நீரிழிவு உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த முத்திரைகளை பயிலுங்கள். நிச்சயம் சுகர் கட்டுக்குள் வரும். தொடர்ந்து முத்திரை செய்தால் சுகர் வராமல் சுகமாக வாழலாம்.

இன்று நிறைய நபர்கள் நீரிழிவு வியாதியினால் அவதிப்பட்டு வருகின்றனர். கணையத்தில் இரண்டு செல்கள் உள்ளன. ஆல்பா செல், பீட்டா செல், பீட்டா செல்தான் இன்சுலினை சுரக்கிறது.

இன்சுலின் ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி சரியான விகிதத்தில் வைத்திருக்கும். இன்சுலின் குறைந்தால் ரத்த குளுக்கோஸ் அளவு ஏறும். இதனையே நீரிழிவு, சுகர், சர்க்கரை வியாதி, டயாபடீஸ் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றோம்.

இந்தக் கணையம் ஒழுங்காக இயங்க உணவில் ஒழுக்கம், வாழ்வில் ஒழுக்கம் வேண்டும். அத்துடன் எளிய முத்திரை மூலம் கணையத்தை சிறப்பாக இயங்க செய்யலாம். நீரிழிவு உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த முத்திரைகளை பயிலுங்கள். நிச்சயம் சுகர் கட்டுக்குள் வரும். தொடர்ந்து முத்திரை செய்தால் சுகர் வராமல் சுகமாக வாழலாம்.

வருண முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கண்களை திறந்து சுண்டுவிரல் பெருவிரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் மூன்றும் தரையை நோக்கி இருக்கட்டும், இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

சுமண முத்திரை செய்முறை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் இரு கை விரல்களையும் திருப்பி படத்தில் உள்ளதுபோல் சுண்டுவிரல், மோதிரவிரல், நடுவிரல், ஆள்காட்டிவிரல் நகங்கள் ஒன்றையன்று தொடட்டும். கட்டைவிரல் மட்டும் மேல் நோக்கி இருக்கட்டும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

உணவு: பசிக்கும் பொழுது பசியறிந்து நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும். முருங்கை கீரை வாரம் ஒரு நாள் சாப்பிடவும்,. நாவல் பழக்கொட்டையை பொடி செய்து ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து வாரம் இரு நாட்கள் சாப்பிடவும். கொய்யாப்பழம் ஒன்றை சிறு துண்டுகளாக்கி ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை மட்டும் குடிக்கவும்.காபி / டீ அதிகம் குடிப்பதை நிறுத்தி சுக்குமல்லி காபி பால் சேர்க்காமல் பருகவும்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.