செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கால் பாதங்கள் வீக்கமின்றி நன்கு செயல்பட முத்திரை

கால் பாதங்கள் வீக்கமின்றி நன்கு செயல்பட முத்திரை

1 minutes read

நிறைய நபர்களுக்கு கால் வலி, உள்ளங்கால் வலி, பாத வீக்கம், கால் ஆணி, விரல்கள் நடுவில் புண் முதலியவை வரும். இவை வராமல் தடுக்கும் எளிய யோகா பயிற்சியை தினமும் செய்தால் வளமாக வாழலாம்.

மனித உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானவை தான். கால் பாதம், கால் விரல்கள் நன்கு இயங்கினால் தான் நாம் நடக்க முடியும். நமது எல்லா செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும்.

பொதுவாக நிறைய நபர்களுக்கு கால் வலி, உள்ளங்கால் வலி, பாத வீக்கம், கால் ஆணி, விரல்கள் நடுவில் புண் முதலியவை வரும். இவை வராமல் தடுக்கும் எளிய யோகா பயிற்சியை தினமும் செய்தால் வளமாக வாழலாம்.

சுமண முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கவும். கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் கைவிரல்களை அப்படியே மாற்றி இரு கைகளையும் சேர்க்கவும். கட்டைவிரல் தவிர மற்ற நான்கு விரல்கள் ஒன்றையன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். படத்தைப் பார்க்கவும். இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் இருக்கவும். காலை/மாலை இருவேளைகள் பயிற்சி செய்யவும்.
எளிய நரம்பு பயிற்சி: விரிப்பில் நேராக இரு கால்களையும் நீட்டி அமரவும். இரு கைகளை பக்கவாட்டில் இடுப்புப் பக்கத்தில் வைக்கவும். உள்ளங்கை தரையில் இருக்கட்டும்.

இரு கால் விரல்களை நன்கு முன்னாள் வளைக்கவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் கால் விரல்களை பின்னால் வளைக்கவும். பத்து வினாடிகள் இருக்கவும், இதே போல் இரண்டு முறைகள் செய்யவும்.

பின் ஒரு கால் பக்கவாட்டில் படத்தில் உள்ளது போல் வலப்பக்கம் வளைக்கவும். வலது காலை தொய்வாக போட்டு இடது காலை இழுத்து விடவும். பத்து வினாடிகள் இருக்கவும். அதேபோல் இடப்பக்கம் செய்யவும். பின் சுழற்சியாக செய்யவும். படத்தை பார்க்கவும்.

உணவு முறை:அதிக காரம், புளிப்பு, உப்பு தவிர்க்கவும். பூசணிக்காய், சுரைக்காய் உணவில் எடுத்துக் கொள்ளவும். கீரைகளில் முருங்கைக்கீரை, பசலை கீரை, மணத்தக்காளி, வல்லாரை கீரை, முடக்கத்தான் கீரை எடுத்துக் கொள்ளவும்.மாதம் இருமுறை மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை எடுத்துக் கொள்ளவும்.

வாரம் ஒரு முறை கல் உப்பு ஒரு டப்பில் போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறியவுடன் கால் பாதங்களை தண்ணீரில் வைத்து ஐந்து நிமிடம் இருக்கவும். பின் கால்களை சாதாரண தண்ணீரில் கழுவவும்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.