செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் ஆளி விதையின் பயன்கள்

ஆளி விதையின் பயன்கள்

1 minutes read

இருவகை ஆளி விதைகள் உள்ளன; ஒன்று, மஞ்சள் மற்றொன்று காவி நிறம். காவி. ஆளி ஆயிரம் ஆண்டுகளாக உணவாக இருந்து வந்தாலும் அது சாயம், கால்நடை தீவனம் மற்றும் சாயத்தில், ஓர் உள்ளடங்கு பொருளாகத் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. காவி ஆளியும் மஞ்சள் ஆளியும் ஒத்த ஊட்டச் சத்து மதிப்புள்ளதாகவும், சம அளவு குறுஞ்-சங்கிலி ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்டதாகவும் திகழ்கின்றன. இதற்கு விதிவிலக்கு, சாலின் என்று அழைக்கப்படும் மஞ்சள் ஆளி; இதில் ஒமெகா-3 குறைவு, முற்றிலும் வேறுபட்ட எண்ணெயின் உயிரியல் கட்டமைப்பு உருவரை படிமம் கொண்டது.

ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் நல்லவிதமாக இருக்கும்.

உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாதபோது, அதிகமாக ஆளிவிதை உட்கொள்ளும்போது, குடல் அடைப்பு ஏற்பட நேரிடும். ஆளிவிதையின் எண்ணெயை சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.

100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன. இந்த மூன்று சத்துகளும் முதலில் இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு.

மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.