70 டன் எடையுள்ள கோயில் இயந்திர உதவியின்றி நகர்த்தப்பட்டது70 டன் எடையுள்ள கோயில் இயந்திர உதவியின்றி நகர்த்தப்பட்டது

இந்தியாவில் ஆம்பூர் அடுத்த அய்யனூரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெத்த பலி அம்மன் கோயில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை முதல் பெங்களூர் வரை தங்க நாற்கர சாலை விரிவாக்கத்தின் போது இந்த கோயில் கோபுரம் ஆகியவை இடிக்கப்பட்டது. மூலவரை அப்படியே பயன்படுத்தி புதிய கோபுரத்துடன் கோயில் கட்டப்பட்டது.இந்நிலையில், கோயிலிருக்கும் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. கோயிலை அப்படியே நகர்த்தும் பணியை மேற்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக ஹரியானா பரக்பூரை சேர்ந்த டிடி பிடி என்ஜினியரிங்க் நிறுவனத்தை கோயில் திருப்பணி குழு தலைவர் தொடர்பு கொண்டார்.  அந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர் யஸ்பால் ராணா கோயிலை ஆய்வு செய்து அதை நகர்த்த முடியும் என தெரிவித்தார்.
பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.3.5 லட்சத்தில் கோயிலை அருகே உள்ள மற்றொரு இடத்துக்கு நகர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 3ம் தேதி இதற்கான பணிகள் துவங்கியது. 2 வாரங்களாக கோயில் புதிதாக அமைய உள்ள இடத்தில் சுமார் 12 அடி  ஆழம் வரை கடக்கால் போடப்பட்டது.  கடக்கால் இருக்கும் பகுதியில் துளை போட்டு உள்பகுதியில் இருந்த கற்கள் மற்றும் கடக்காலை அகற்றினார்கள். பின்னர், 47 ஜாக்கிகள் கோயில் கோபுரத்தின் அடியில் பொருத்தப்பட்டது. 8 மி.மீ. கனம் கொண்ட 224 இரும்பு பிளேட்டுகளை பயன்படுத்தி அரை அடி அகல பேரிங்குகள் இரும்பு தண்டவாளங்களின் மீது பொருத்தப்பட்டது.

இதற்காக கோயில் கடக்கால் இருக்கும் பகுதியில் துளை போட்டு உள்பகுதியில் இருந்த கற்கள் மற்றும் கடக்காலை அகற்றினார்கள். பின்னர், 47 ஜாக்கிகள் கோயில் கோபுரத்தின் அடியில் பொருத்தி, 8 மில்லிமீட்டர் கனம் கொண்ட 224 இரும்பு பிளேட்டுகளை பயன்படுத்தி அரை அடி அகல பேரிங்குகள் இரும்பு தண்டவாளங்களின் மீது பொருத்தினார்கள். இதை தொடர்ந்து நேற்று காலை கோயில் கோபுரத்தை நகர்த்த லட்சுமண் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் கோயில் கோபுரத்தை இன்ச் இன்ச்சாக நகர்த்த துவங்கினர். கோயில் கோபுரம் நகர்த்தப்படுவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். கோயில் கோபுரம் மெல்ல நகர துவங்கியது கண்டு இப்பகுதியினர் பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

ஆசிரியர்