பிரான்ஸில் நடைபெறும் மொபைல் குறும்பட போட்டியில் ஈழத்தவர் குறும்படம் முன்னணியில் – இன்றே நீங்களும் வாக்கினை பதிவுசெய்யுங்கள்..பிரான்ஸில் நடைபெறும் மொபைல் குறும்பட போட்டியில் ஈழத்தவர் குறும்படம் முன்னணியில் – இன்றே நீங்களும் வாக்கினை பதிவுசெய்யுங்கள்..

பிரான்ஸில் நடைபெற்றுவரும் மொபைல் குறும்பட போட்டியில் ஈழத்தவர் குறும்படமான “God is Dead” குறும்படம் முதல் 50 க்குள் தெரிவு செய்யப்பட்டு முன்னணியில் இருக்கின்றது. பிரான்ஸில் இயங்கும் அவதாரம் தயாரிப்பில் வெளியான இக்குறும்படத்தை சதாபிரணவன் இயக்கியுள்ளார்.

உலகளாவியரீதியில் நடைபெறும் இப்போட்டியில் 810 குறும்படங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் 50 குறும்படங்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேவேளை இணைய பார்வையாளர்கள் மூலம் வாக்களிக்கும் முறை மூலமும் சிறந்த திரைப்படம் தெரிவாக உள்ளது.

ஒரு நிமிடமாகவும் மற்றும் ஒரே ஒரு மொபைல் தொலைபேசி மூலமாகவும் இக் குறும்படங்கள் எடுக்கப்பட வேண்டும்  என்ற போட்டி விதிமுறைக்கமைவாக  “God is Dead” எடுக்கப்பட்டுள்ளது.

தாயகத்தில் ஈழத்தமிழரின் நிகழ்கால போக்கினை துல்லியமாக கோடு போட்டுக்காட்டும் இக்குறும்படம் ஒரு நிமிடமே ஆனாலும் நீண்ட போராட்ட வரலாற்றின் தற்போதைய நிலையை ஒரு முழுநீள திரைப்படத்தின் வலிமையை கொண்டுள்ளது.

இப்படத்திற்கு வாக்களிப்பு செய்து வெற்றியீட்ட வைப்பதன்மூலம் நாம் உலக அளவில் தாயாக மக்களின் நிலையை எடுத்துச் செல்ல முடியும். இது எமக்குக்கிடைத்த சந்தர்ப்பம். தயவு செய்து கீழ் உள்ள இணைப்பு மூலம் குறும்படத்தினை பார்வையிடவும் உங்கள் வாக்குகளையும் பதிவு செய்யுங்கள்.

படம் பார்பதற்கும் வாக்கு அளிப்பதற்கும்:

http://fr.mobilefilmfestival.com/video/god-is-dead740

குறிப்பு : ஒரு நபர் ஒரு நாளைக்கு 10 தடவைகள் வாக்களிக்க முடியும் 14/01/2014 தொடக்கம் 06/02/2014 வரை இவ்வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

How to vote..

gfg

ஆசிரியர்