ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் கட்சிகளும் தமிழ் மக்களை கொன்றன! வட மாகாணசபை உறுப்பினர் தர்மபாலாரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் கட்சிகளும் தமிழ் மக்களை கொன்றன! வட மாகாணசபை உறுப்பினர் தர்மபாலா

ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகளும் தமிழ் மக்களை கொலை செய்தன. ஆனால் அவர்களும் இன்று கூட்டமைப்பு எனக் கூறிக் கொண்டு தாம் செய்த கொலைகளை அரசின் மீது போடுகின்றனர் என வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் ஏ.டி.தர்மபாலா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (27) வடமாகாணசபை அமர்வின் பின்னர் ஊடகவியாளரிடம் கருத்துத் தெரிவிக்கையில்;

ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்றன முன்னர் ஆயுதக் குழுக்களாக செயற்பட்டன. அவர்களும் பல தமிழ் இளைஞர், யுவதிகளை பிடித்து கொலை செய்தனர். மக்களிடம் கொள்ளையடித்தன. ஆனால், இன்று தாம் செய்த கொலைகளை மறைத்து விட்டு அரசாங்கம் மீது அப் பழிகளைப் போடுகின்றன. இது தொடர்பில் அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்படவேண்டும். அப்பொழுது தான் யார் கொலைகள் செய்தது என்பது தெரியவரும் எனத் தெரிவித்தார்.

ஆசிரியர்