லண்டன் நில அபகரிப்பு மாநாட்டில் பங்கேற்க த.தே.ம.மு மற்றும் த.தே.கூ குழு லண்டன் வருகை லண்டன் நில அபகரிப்பு மாநாட்டில் பங்கேற்க த.தே.ம.மு மற்றும் த.தே.கூ குழு லண்டன் வருகை

பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் லண்டன் வந்தடைந்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன் மற்றும் பா.அரியனேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் லண்டன் வந்தடைந்துள்ளனர்.

கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் இந்த மாநாட்டிற்கு செல்லவுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் விசா அனுமதி கிடைக்கவில்லை.

பெரும்பாலும் இன்னும் ஓரிரு தினங்களில் அவர்களும் லண்டன் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட கிழக்கு மாகாணத்தில் யுத்ததின் பின் ஏற்பட்டிருக்கும் காணி அபகரிப்புக்கள், சுவீகரிப்பு உள்ளிட்ட ஏனைய காணிசார் பிரச்சினைகள் சம்மந்தமாக சர்வதேச சமூகத்திற்கு ஜெனிவா மாநாட்டை முன்னிட்டு விளக்கும் முகமாக காணி மாநாடொன்றை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிரியர்