எம்மீதான குற்றச்சாட்டு பொய்யானது: இலங்கை இராணுவம்எம்மீதான குற்றச்சாட்டு பொய்யானது: இலங்கை இராணுவம்

Ruwan Wanigasooriya_CI

இலங்கையில் பயங்கரவாதத்தை முழுதாக தோற்கடித்த மனிதாபிமான நடவடிக்கையின் போது இராசாயன ஆயுதங்கள் உட்பட மரபல்லாத ஆயுதங்களை ஆயுதப்படைகள் பயன்படுத்தின என பல தரப்பினராலும் ஊடகங்கள் வழியே பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டுகளாகும் என்று இராணுவப்பேச்சாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில், பாதுகாப்பு தலைமை அதிகாரி அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புலிகள் தொடர்ச்சியாக மரபு அல்லாத பல வழிகளில் இராணுவத்துக்கும் இலங்கை சிவிலியன்களுக்கும் எதிராக தாக்குதல்களை நடத்திய போதிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது ஆயுதபடைகள் குறைந்தபட்ச அளவிலான மரபு ரீதியான வழிகளை மட்டும் தேவையின் நன்மை கருதி பயன்படுத்தினர் என தெரிவித்தார்.

ஆசிரியர்