ஒற்றைப் பாறையில் செதுக்கிய வெட்டுவான் கோயில்ஒற்றைப் பாறையில் செதுக்கிய வெட்டுவான் கோயில்

frfதமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கழுகுமலை எல்லோரா குகைக் கோயில்களுக்கு நிகராகக் கருதப்படுகிறது. இது தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக் கோயில்களில்  ஒன்றாகும்.

கழுகுமலை என்பது ஒரு சிறிய கிராமமாகும். இது கோவில்பட்டியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. சங்கரன்கோயிலுக்கும், கோவில்பட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருப்பதுதான்,  வரலாற்றுச் சிறப்பு மிக்க

கழுகுமலை. இது மிக முக்கியமான ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. கழுகுமலைப் பகுதியில், 7 மற்றும் 8ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல  பாறைச் சிற்பங்களைக் காண முடியும்.
இங்கு மூன்று முக்கியப் பகுதிகள் உள்ளன. அவை, வெட்டுவான் கோயில், சமணர் பள்ளி, கழுகாசலமூர்த்தி திருக்கோயில் என்பதாகும்.

415

ஆசிரியர்