மாணவர்கள் ஒன்று கூடியதால் பளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றம்!மாணவர்கள் ஒன்று கூடியதால் பளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றம்!

கிளிநொச்சி – யாழ். ஏ-9 வீதியில் பளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக 500, இற்கும் மேற்பட்ட பளை மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பளை பொலிஸ் நிலையப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது அரச ஊழியர்களை ஏற்றிக் கொண்டு இன்று (06.03.2014) காலை யாழ். நோக்கிச் சென்ற பஸ் பளை மத்திய கல்லூரியில் 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயதான ஜெயசிங்கம் தேவேந்திரன் என்ற மாணவன் மீது மோதியதாலேயே இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

images (4)
இதில் படுகாயமடைந்த மாணவன் தற்போது யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன் குறித்த விபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பளை மத்திய கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பான ஏ-9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

untitled1

 

ஆசிரியர்