39 பில்லியனில் இரு அதிவேக நெடுஞ்சாலைகள் 39 பில்லியனில் இரு அதிவேக நெடுஞ்சாலைகள்

download (1)

39 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொட்டாவ – கடுவலை அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 8 ஆம் திகதியும் காலி – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலைகள் நெடுஞ்சாலை எதிர்வரும் 15 ஆம் திகதியும் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட உள்ளதாக துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
21 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 10.5 கிலோ மீற்றர் நீளம் கொண்ட கொட்டாவ – கடுவலை அதிவேக நெடுஞ்சாலை அடுத்த வருடத்திற்குள் கெரவலப்பிட்டிய வரை விரிவுப்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.
மேலும் இதன் முதல் கட்டமாக 29 கிலோ மீற்றர் தூரம் கொண்ட கடுவலையில் இருந்து கடவத்தை வரையான வீதியின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இதனை தவிர 18 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 30.8 கிலோ மீற்றர் நீளம் கொண்ட காலி – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையை அம்பாந்தோட்டை வரை விரிவுப்படுத்தும் பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

fr5

ஆசிரியர்