மலேசிய விமானம் விபத்து : விமான நிலையத்தில் கண்ணீருடன் உறவினர்கள்மலேசிய விமானம் விபத்து : விமான நிலையத்தில் கண்ணீருடன் உறவினர்கள்

malasysia

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் இன்று வியட்நாமின் தோ சு கடற் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள், செய்தி அறிந்து விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

தங்களது உறவினர்களை விமானத்தில் ஏற்றி விட்டு வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே, விமானம் காணாமல் போனதாக செய்திகள் வெளியானதை அறிந்து, உடனடியாக பதறி அடித்துக் கொண்டு விமான நிலையத்துக்கு வந்துள்ள உறவினர்கள், தங்களது உறவினர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள கண்ணீருடன் காத்திருந்தனர்.

இதற்கிடையே, விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக செய்திகள் தெரிவித்தன. இதனால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூடியுள்ள உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

 

ஆசிரியர்