பாடசாலை ஜன்னலை உடைத்து கணனி கொள்ளை பாடசாலை ஜன்னலை உடைத்து கணனி கொள்ளை

கோவில் ஒன்றில் இருந்து திருடப்பட்ட திரிசூழத்தால் பாடசாலையொன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் நேற்று இரவு (07.03.2014) திரிசூழத்தால் கணணி அறையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த கணணியொன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இன்று (08.03.2014) பாடசாலை நாள் என்பதனால் அதிகாலையில் பாடசாலைக்கு வருகை தந்த ஒருவரால் பாடசாலையின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கணணி கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Untitled

Untitled2

ஆசிரியர்