திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் செல்வகுமார் விக்னேஷ்வரன் என்ற சிறுவனை சிறுவனின் பாட்டி முகத்திலும், கால்களிலும் சூடு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவன் பாடசாலைகளில் சில பொருட்களை திருடுவதனால் தான் குறித்த பாட்டி விறகு கட்டையால் சூடு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுவனின் தந்தை, தாய் இருவருமே வெளிநாட்டில் இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு குறித்த பாட்டியை 07.03.2014 அன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின் 10000 ரூபா சரீர பிணையில் விடுவித்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
