அதிவேக நெடுஞ்சாலை பயண கட்டண அறிவிப்புஅதிவேக நெடுஞ்சாலை பயண கட்டண அறிவிப்பு

1600523205high-way-vehcles2

கொட்டாவ – கடுவலை அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொட்டாவையிலிருந்து கடுவலை வரை செல்லும் சகல வாகனங்களுக்கும் நூறு ரூபா அறவிடப்படவுள்ள அதேவேளை பார ஊர்திகளுக்கு 300 ரூபா அறவிடப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. காலிக்குச் செல்பவர்கள் கொழும்பில் காணப்படும் வாகன நெரிசல்களைத் தவிர்ப்பதற்கு இந்தச் சுற்றுவட்டப் பாதையைப் பயன்படுத்த முடியும்.

1600523205high-way-vehcles2
இந்த சுற்றுவட்டத்தின் வடக்கு நுழைவுப் பகுதி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான அதிவேக நெடுஞ்சாலையுடனும், தெற்கு எல்லை கொழும்பு இரத்தினபுரி, வெல்லவாய மட்டக்களப்பு வீதிகளையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி காலி – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டு வாகன போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர்