13 கோடிக்கு ஏலம் போன வி.ஐ.பி. செல் நம்பர்13 கோடிக்கு ஏலம் போன வி.ஐ.பி. செல் நம்பர்

images (2)

700 போட்டியாளர்கள் பங்கேற்ற ஏலத்தில் 050-7777777 என்ற செல் நம்பர் 78 லட்சத்து 77 ஆயிரத்து 777 திர்ஹமுக்கு விலை போய் சாதனை படைத்துள்ளது. பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான எடிசலாட் 050-7777777, 050-77777770 போன்ற 70 வி.ஐ.பி. செல்போன் நம்பர்களை ஏலத்தில் விட முடிவு செய்தது.
இதில் டைமண்ட் பிளஸ் என்ற வரிசையில் 7 நம்பர்கள், டைமண்ட் வரிசையில் 25 நம்பர்கள், 18 பிளாட்டினம் மற்றும் 20 கோல்ட் நம்பர்கள் ஆகியவற்றை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தம் எமிரேட்ஸ் ஏல நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
டைமண்ட் பிளஸ் வரிசையில் உள்ள 7 நம்பர்களை வாங்குபவர்களுக்கு மாதந்தோறும் 22 ஆயிரத்து 500 உள்ளூர் அழைப்பு நிமிடங்கள், மாதந்தோறும் 2 ஆயிரத்து 250 சர்வதேச அழைப்பு நிமிடங்கள், மாதந்தோறும் 100 ஜி.பி. இண்டர்நெட் இணைப்பு, 22 ஆயிரத்து உள்ளூர் எஸ்.எம்.எஸ். போன்ற சேவைகள் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் மற்றும் துபாயில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் என இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த ஏலம் நடைபெற்றது. மொத்த நம்பர்களையும் ஏலத்தில் எடுக்க சுமார் 700 பேர் இதில் பங்கேற்றனர். பரபரப்பான இந்த ஏலத்தில் 050-7777777 என்ற செல் நம்பர் மட்டும் 78 லட்சத்து 77 ஆயிரத்து 777 திர்ஹமுக்கு விலை போனது. இந்திய மதிப்புக்கு இது 13 கோடியே 13.5 லட்சம் ரூபாய்க்கு சமமான தொகையாகும். இதர 69 நம்பர்களும் என்ன விலைக்கு ஏலம் போனது, என்பது தொடர்பாகவோ, இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் எவ்வளவு? என்பது பற்றியோ எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதன் மூலம் கிடைத்த லாபம் கலிபா அறக்கட்டளையின் பணிகளுக்காக செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்