மக்கள் ஆணைக்கு ஒழிய காலணித்துவத்திற்கு தலைவணங்க தயாரில்லைமக்கள் ஆணைக்கு ஒழிய காலணித்துவத்திற்கு தலைவணங்க தயாரில்லை

மக்கள் ஆணைக்கு ஒழிய காலணித்துவத்திற்கு தலைவணங்க தயாரில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
கம்பஹாவில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி தெரிவித்த கருத்து:-

“நாட்டில் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் சரிபிழையை நாட்டுமக்களே தீர்மானிக்க வேண்டும்.
அதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தீர்மானிக்க முடியாது என நாங்கள் மிகத் தெளிவாகக்கூறுகின்றோம். இதனை தெரியப்படுத்தும் தீர்மானம் உங்கள் வசமே காணப்படுகின்றது. நாட்டு மக்கள் முன்னிலையில் தலைவணங்க நாங்கள் தயாராக உளளோம் ஆனால் வெளிநாடுகளின் ஏகாபத்தியவாதிகளுக்கோஇ அவர்களின் சாகக்களுக்கோ நாங்கள் ஒருபோதும் அடிபணிய தயாராவில்லை என மிகத்தெளிவாகக்கூறுகின்றோம்.”

மீரிகம பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான திலக் அசோக்க மற்றும் சனத் ரணசிங்க ஆகியோரும் மினுவாங்கொடை பிரதேச சபையில் எதிர்க்கட்சி தலைவர் சந்திக்க நாராயணபிட்டிய இ பிரதேச சபையின் உறுப்பினர் டெஸ்மன் குணவர்த்தன ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்