8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (11.03.2014) ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை மார்ச் 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி மாதம் 29ஆம் திகதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 38 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களது 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இன்று 4வது முறையாக ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

images

ஆசிரியர்