முருகனுக்கு “சாக்லெட் பூஜை’முருகனுக்கு “சாக்லெட் பூஜை’

கேரள மாநிலம் ஆலப்புழை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சாக்லெட் வைத்து வழிபடுகின்றனர். அந்த சாக்லெட் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அங்குள்ள சுப்பிரமணியபுரத்தின் வெளிப்புறத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. அந்த நகரத்தை  மஞ்ச் முருகன் என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

இந்தக் கோவிலில் ஆரம்பத்தில் சிறு குழந்தைகள் மட்டுமே சாக்லெட் வைத்து வழிபட்டு வந்தனர். தற்போது, பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினரும் சாக்லெட் வைத்து வழிபடுகின்றனர்.

பிற மாநிலம் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் அட்டைப் பெட்டிகளில் சாக்லெட் எடுத்து வந்து இக்கோவிலில் பூஜை செய்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருவதையடுத்து இக்கோவில் அண்மையில்  புதுப்பிக்கப்பட்டது.

ஆசிரியர்