பேச்சுவார்த்தை இடம்பெறாமைக்கு காரணம் யார்- சரத்குமாரபேச்சுவார்த்தை இடம்பெறாமைக்கு காரணம் யார்- சரத்குமார

2065853810fis

இலங்கை – இந்திய மீனவர்கள் இடையே இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டமைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமே காரணம் என இலங்கை மீன்பிடி வளத்துறை பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில அரசு இலங்கை மீது அழுத்தம் பிரயோகிப்பாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க தமிழக முதல்வர் வாய்ப்பளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய பேச்சுவார்த்தை இடம்பெறாத போதும் எதிர்வரும் 18ம் திகதி பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்திய அரசு கேட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ஆசிரியர்