உக்ரேன் சனாதிபதி வெளியேற்றத்தால் கவலைகொள்ளும் இலங்கைஉக்ரேன் சனாதிபதி வெளியேற்றத்தால் கவலைகொள்ளும் இலங்கை

உக்ரேன் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சனாதிபதி பதவி கவிழ்க்கப்பட்டதையிட்டு இலங்கை கவலையடைந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரெய்னில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான, ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் பலவந்தமாக அகற்றப்பட்டமை கவலையளிப்பதுடன், உக்ரெயினில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற நிலையை அதிகரித்திருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உக்ரெய்ன் நிலைமை தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு உருவாகியிருந்த பதற்ற சூழ்நிலையைக் குறைக்கும் வகையில் ரஷ்யா செயற்பட அவர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

Mahinda_Rajapaksa_Victor_Ya

ஆசிரியர்