காதலிக்கு இன்ப அதிர்ச்சியளித்த காதலன்காதலிக்கு இன்ப அதிர்ச்சியளித்த காதலன்

கனடாவின் கல்கரி பிராந்தியத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் வித்தியாசமான முயற்சியே இது. 30000 அடி உயரத்தில் எயர் கனடா விமானம் பறந்து கொண்டிருந்த போது பெண் தோழியிடம் தனது காதலைத் தெரிவித்திருக்கிறார்
கலகரியிலிருந்து ரொறன்ரோவுக்குச் செல்லும் எயர் கனடா விமானத்தில் 26 வயதான  Scott Wetton என்பவர் 28 வயதான Jacqueline Poushay என்ற தனது பெண் தோழியிடம் ஆச்சரியமாகவும் அதேநேரத்தில் வெற்றிகரமாகவும் தனது காதலைச் சொல்லியிருக்கின்றார். விமானத்தில் உள்ள அறிவிப்பு அமைப்பின் ஊடாக தனது காதலனின் குரலைக் கேட்கும் வரை காதலன் விமானத்தில் இல்லை என நினைத்திருந்தார்.

விமானம் பறந்து கொண்டிருந்த போது பெண் தோழியிடம் காதலைத் தெரிவித்தது செம ஹிட்டாகியுள்ளது. முன்னமேயே இரண்டு டிக்கெட்டுக்களை முன் பதிவு செய்த காதலன் தான் காதலிக்கு பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனது காதலை மோதிரத்துடன் சென்று தெரிவித்துள்ளார். காதலனின் எதிர்பாராத செயலைக் கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த காதலி உடனே அழுதே விட்டார்.

குறித்த நிகழ்வுக்கு எயார் கனடாவின் விமான நிலைய ஊழியர்கள் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்படத்தக்கது.

ஆசிரியர்