ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு நோக்கிஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு நோக்கி

town-of-mermaids-batticaloa

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளது.

இக்குழு இவ்வார இறுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளது.

20ம் திகதி செங்கலடி பிரதேச செயலகத்திலும் 21ம் திகதி கிராண் கலாசார மத்திய நிலையத்திலும் ஆணைக்குழு கூடவுள்ளது.

23ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசாரணை இடம்பெறவுள்ளது.

ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று வடக்கு, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து கிடைத்த 160 முறைப்பாடுகளை குறித்த குழு விசாரணை செய்யவுள்ளது.

அத்துடன், அன்றைய தினங்களில் புதிய முறைப்பாடுகளையும் ஏற்றுக் கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்[highlight][/highlight]துள்ளது.

காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை 17, 000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளாதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆசிரியர்