உலகின் பெரிய பனிக்குகையின் வயது 8 கோடி ஆண்டுகள்!உலகின் பெரிய பனிக்குகையின் வயது 8 கோடி ஆண்டுகள்!

ஆஸ்திரியா நாட்டின் சால்ஷ் பெர்க் நகரின் பக்கத்தில் வெர்பென் எனும் பகுதியில் கோச்கோகெல் மலைகளுக்கு அருகே உள்ளது உலகின் மிகப் பெரிய பனிக்குகையான எஸ்ரிசென்வெல்ட் (Eisriesenwelt) . 42 கி.மீ. நீளத்தையுடைய இந்தப் பனிக்குகை, முதல் ஒரு கி.மீ. தூரத்திற்கு பனிக்கட்டிகளாலும் மீதமுள்ள பகுதி முழுவதும் சுண்ணாம்புக்கல்லாலும் ஆனது. எனினும், அவை முழுவதும் பனியால் சூழப்பட்டுள்ளதே இதன் சிறப்பம்சமாகும். 75 அடி உயரம் உடைய பனிக் கோபுரம் ஓர் இடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிக்குகைகள் 6 முதல் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எஸ்ரிசென்வெல்ட் பனிக்குகை 1879ஆம் ஆண்டு சால்ஷ்பெர்க் நகரத்தைச் சேர்ந்த ஆண்டோன் லாசெட் என்ற ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1912ஆம் ஆண்டு அலெக்சாண்டர் வான் மார்க் என்பவர் ஆராய்ச்சி நோக்கில் குகைக்கு வந்தார். தொடர்ந்து பல ஆய்வாளர்கள் வருகை புரிந்ததால் 1920ஆம் ஆண்டு குகையில் தனி அறைகள் ஆராய்ச்சி செய்பவர்களுக்காக அமைக்கப்பட்டன.
1955ஆம் ஆண்டு கேபிள் கார்கள் குகைக்குச் செல்ல ஏற்படுத்தப்பட்டன. குகையின் நீளம் 42 கி.மீ. இருந்தபோதிலும், 1 கி.மீ. தூரம் வரையே சுற்றுலாப் பயணிகள் சென்றுவரும் வசதி செய்யப்பட்டுள்ளது. அனுமதித்துள்ள 1 கி.மீ. பாதையைச் சுற்றிப் பார்த்து வரவே 1 மணி நேரம் ஆகுமாம் ஆஸ்திரியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமாகத் திகழும் இந்தக் குகையைப் பார்வையிட ஆண்டுக்கு 2 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.

குகை உள்ள பகுதியில் கடுமையான மழை பெய்து அங்குள்ள சால்ஜென் நதியில் வெள்ளம் ஏற்பட்டு குகைக்குள்ளும் வெள்ள நீர் பாய்ந்திருக்கலாம். பின், கடுமையான பனிப்பொழிவின் காரணமாக அந்தத் தண்ணீர் பனியாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

images (1)

ஆசிரியர்