கஞ்சா கடத்தியவர் காருடன் கைதுகஞ்சா கடத்தியவர் காருடன் கைது

​சொகுசு கார் ஒன்றில் கஞ்சா கடத்திச் சென்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரத்தினபுரி மோசடி தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 40 லட்சம் ரூபா பெறுமதியான 40 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கஞ்சாவை எடுத்துச் செல்ல பயன்படுத்திய வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

z_p06-Towards-02

ஆசிரியர்