March 27, 2023 4:54 am

தனக்குத்தானே தலையில் ஆணி அடித்த சீன நபர்தனக்குத்தானே தலையில் ஆணி அடித்த சீன நபர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தனக்குதானே தலையில் ஆணிகளை அடித்துகொண்ட நபரொருவர் அதிசயமாக உயிர்பிழைத்துள்ள சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

பெயர் வெளியிடப்படாத 69 வயதான சீன நபரொருவர் தனது தலையில் 10 செ.மீ (4 அங்குலம்) நீளமான 3 ஆணிகளை அவரே அடித்துள்ளார். 3 மாதங்கள் வரையில் புஜியான் மாகாணத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் கடந்த வியாழக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இவரது உயிரைக் காப்பாற்றிய போதிலும் 3 ஆணிகளையும் அகற்றுவது ஆபத்தாக அமையலாம் என்பதற்காக அவற்றினை அவரது தலையிலிருந்து வைத்தியர்கள் அகற்றவில்லை.

மேற்படி நபர் தனக்குத்தானே இவ்வாணிகளை அடித்திருக்க வாய்ப்பில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இச்சம்பவம் குறித்து இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்