ஜனாதிபதியுடன் பேசினால் மட்டுமே தீர்வுகாண முடியும்ஜனாதிபதியுடன் பேசினால் மட்டுமே தீர்வுகாண முடியும்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மட்டுமே பேசி தீர்க்க முடியும். மாறாக, சர்வதேச சமூகத்தை நம்பி பிரச்சினைகளுக்கு தீர்வை எதிர்பார்க்க முடியாதென தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார். ஐ.ம.சு.மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், இரு மாகாண சபைகளையும் அரசாங்கம் கைப்பற்றுவது உறுதி. இவ்வளவு நாளும் அரசாங்கத்தை விமர்சித்து வந்த சில தமிழ் தலைவர்கள் தற்பொழுது அமெரிக்காவை விமர்சிக்கின்றனர்.

நாட்டில் இடம்பெறும் அபிவிருத்தி செய்யும் அமைதிச் சூழலையும் குழப்பவே இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. 30 வருட யுத்தத்தின் பின் நாடு முன்னேற்றமடைந்து வருகிறது .சகல தமிழ் மக்களும் அரசாங்கத்திற்கு தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.

இதனூடாக சர்வதேச சமூகத்துக்கு எமது பலத்தைக் காட்ட வேண்டும் என்றார்.

digambaram

ஆசிரியர்