தாய்லாந்தின் அவசர நிலைப் பிரகடனம் ரத்து செய்யப்பட்டுள்ளதுதாய்லாந்தின் அவசர நிலைப் பிரகடனம் ரத்து செய்யப்பட்டுள்ளது

bec6d289-65a5-4678-a9ce-9c4b776d0958_S_secvpfதாய்லாந்தின் பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா, கடந்த 2006-ம் ஆண்டில் அங்கு பதவி இறக்கம் செய்யப்பட்ட அவரது சகோதரர் தக்ஷின் ஷினவத்ராவின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் கூறி அவரையும் பதவி இறங்கக் கோரி எதிர்க்கட்சியினரின் போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

அதிகரித்த போராட்டங்களால் பதவி இறங்கினாலும் காபந்து பிரதமராகத் தொடர்ந்த இங்க்லக் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பலத்த எதிர்ப்புக்கிடையே அங்கு பொதுத் தேர்தலை நடத்தினார்.
பல தொகுதிகளில் வோட்டுப்பதிவு தடை செய்யப்பட்ட நிலையில் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றாலொழிய முடிவுகளை அறிவிக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.

இங்க்லக் பதவி இறங்கினால்தான் மறுதேர்தல் நடைபெறும் என்று கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சியினர் தலைநகர் பாங்காக்கில் முற்றுகைப் போராட்டங்களைத் துவக்கினர்.இந்தக் கலவரங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூடுகளிலும், கையெறி குண்டுகளின் தாக்கத்திலும் 23 பேர் பலியாக நேர்ந்தது.

இதனைத்தொடர்ந்து தலைநகர் பாங்காக்கில் இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டங்கள் குறைந்து இணக்கமான சூழல் நிலவுவதால் பாங்காக்கிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவசர நிலை உத்தரவை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

நாளை முதல் இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்படும் என்று தேசிய பாதுகாப்புத் தலைவர் பரடோர்ன் பட்டநாத்புட்டூர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவினை பிரதமர் இங்க்லக் ஷினவத்ராவும் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவரது பொது செயலாளர் சுரானந் வெஜ்ஜஜிவா குறிப்பிட்டுள்ளார்.

30187651-01_big

ஆசிரியர்