புதிய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : குழந்தை பலி ஒன்பது பேர் படுகாயம்புதிய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : குழந்தை பலி ஒன்பது பேர் படுகாயம்

roadதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் குழந்தையொன்று உயிரிழந்திருப்பதுடன் ஒன்பது பேர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்விபத்து நேற்று (19.03.2014) அதிகாலை 5.45 மணிக்கு தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றது.

சம்பவத்தில் இரண்டரை வயதான பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

கொழும்பை நோக்கி பயணித்த லொறியொன்றின் பின்னால் காலியிலிருந்து கொட்டாவை நோக்கி வந்த வேன் ஒன்று மோதியுள்ளது.

சம்பவத்தில் வேனில் பயணம் செய்த சாரதி உள்ளிட்ட ஒன்பது பேரே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பாணந்துறை மற்றும் நாகொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலியிலிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட வானொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Untitled

ஆசிரியர்