புலனாய்வு பிரிவினரால் யாழில் குடும்பஸ்தர் கைதுபுலனாய்வு பிரிவினரால் யாழில் குடும்பஸ்தர் கைது

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்றிரவு குடும்பஸ்தர் ஒருவர் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ச.ஜெயரமேஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நான்காவது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் உறுப்பினர் சோ.சுகிர்தன் மற்றும் கைதுசெய்யப்பட்ட நபரின் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்