மலேசியன் விமானத்தை தேட மேலும் 7 கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது சீனாமலேசியன் விமானத்தை தேட மேலும் 7 கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது சீனா

malaysia

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடி தென் இந்திய  பெருங்கடல் பகுதிக்கு இன்று சீனா 7 கப்பல்களை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவைப்பை அந்நாட்டு செய்தி நிறுவனமான சின்குவா வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 3 கடற்படை கப்பல்கள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும் மேலும் அண்டார்டிக்கா பகுதியில் ஆய்வு மேற்கொள்ள ஐஸ் பிரேக்கர், அல்லது பனி டிராகன்,  விரைவில் அங்கு வந்து சேரும், என தெரிவிக்கப்பட்டுள்ளது . மாயமான மலேசியன் விமானம் காணாமல் போய் 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அமெரிக்கா நார்வே, பிரிட்டன், ஆகிய நாடுகளும் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தென் இந்திய பெருங்கடலில் விமானத்தின் பாகம் போன்ற 2 பொருட்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் நேற்று கண்டுபிடித்தது இது 24 மீட்டர் நீளம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

ஆசிரியர்