மார்பகத்தை பெரிதாக்க போட்ட ஊசியால் பெண் பலிமார்பகத்தை பெரிதாக்க போட்ட ஊசியால் பெண் பலி

அர்ஜெண்டினா நாட்டில் உள்ள 39 வயது பெண் ஒருவர் தன்னுடைய மார்பகங்களை பெரிதாக்குவதற்காக Vaseline ஊசி போட்டதால் நுரையீரலில் உள்ள ரத்தம் உறைந்து பரிதாபமாக பலியானார்.

அர்ஜெண்டினா நாட்டில் உள்ள Sonia Perez என்ற 39 வயது பெண்ணுக்கு மார்பகம் சிறிதாக இருந்ததால் தாழ்வு மனப்பான்மையுடன் கவலையுடன் இருந்துள்ளார். அவருடைய கணவரும் தோழிகளும் அவருடைய மார்பகம் குறித்து அடிக்கடி கேலி செய்துகொண்டே இருப்பார்களாம். இதனால் தன்னுடைய மார்பகத்தை பெரிதாக்க வேண்டும் என்று எண்ணிய அந்த பெண், தனக்கு தெரிந்த சிலரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதில் ஒருவர் Vaseline ஐ சிரிஞ்ச் மூலம் மார்பகத்திற்குள் இன் ஜெக்ட் செய்தால் மார்பகம் பெரிதாகிவிடும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

இதை உண்மை என நம்பிய Sonia Perez Llanzon, வீட்டிற்கு வந்து தானே Vaseline ஊசி போட்டுக்கொண்டாராம். சரியாக ஒருமாதம் கழித்து தீடீரென அவருக்கு உடல்நலம் குறைந்து மருத்துவமனையில் அனுமதித்தபோது தான் அவருடைய நுரையீரலில் உள்ள ரத்தம் உறைந்து காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் நடத்திய சோதனையில் அவர் Vaseline ஊசி போட்டது தெரிய வந்தது. மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை. நேற்று முன் தினம் அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

மரணம் அடைந்த Sonia Perez Llanzon என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளித்த Pla, head of surgery at Lucio Molas Hospital, in Santa Rosa  அவர்கள் கூறியபோது தன்னுடைய மருத்துவ அனுபவத்தில் இப்படி ஒரு முட்டாள்தனத்தை இதுவரை சந்தித்ததில்லை என்றும் மார்பகத்தை பெரிதாக்குவதற்கும் Vaseline  ஊசி போடுவதற்கும் சிறிதும் சம்மந்தம் இல்லை என்றும் கூறினார்.

தவறான அறிவுரையால் அந்த பெண் உயிரிழந்ததை குறித்து அந்த பகுதியில் உள்ளோர் பெரிதும் பரிதாபப்பட்டனர்.

ஆசிரியர்