ஐ நாவில் இலங்கைக்கு எதிராக புதிய அறிக்கைஐ நாவில் இலங்கைக்கு எதிராக புதிய அறிக்கை

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பாக புதிய அறிக்கை ஒன்றின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமை குழுஇ மனித உரிமை சட்டத்தரணி யஸ்மின் சூகாஇ உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் ஆகியோர் இணைந்து இந்த அறிக்கை தயாரித்து. ஐ நா சபையிடம் வழங்கியுள்ளது.

10 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கை தொடர்பில் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தென் ஆப்பிரிக்க பேராயர் டெஸ்மண் டுட்டுவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

போருக்கு பின்னர்இ கட்டாய வாய்வழி புணர்ச்சிஇ குதவழி வல்லுறவுஇ தண்ணீர் சித்திரவதை உள்ளிட்ட பாலியல் மற்றும் உடல் ரீதியான கொடுமைகள் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்ட புகலிட கோரிக்கையாளர்களின் சாட்சியங்களும் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் அவுஸ்திரேலியா தமிழர்களை நாடு கடத்துவது தொடர்பிலும் கேள்வி எழுப்பட்டுள்ளது.

இரும்பு குழாய்களினால் தாக்கப்பட்டஇ சிகரெட்டுக்களால் சுடப்பட்ட மற்றும் சூடான பொருட்களினால் உடலில் முத்திரை பதிக்கப்பட்டு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களின் சாட்சியங்கள் இதில் உள்ளடக்கப்படடுள்ளன.

இலங்கை அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட 40 பேரிடம் இருந்து பெறப்பட்ட விசாரணை நேர்காணல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து சித்திரவதைகளும் கிட்டத்தட்ட சில பாலியல் வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் பலர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள். இலங்கை திரும்பிய இவர்களிடம் தஞ்சம் பெறுவதற்கான முயற்சிகள் மற்றும் அவுஸ்திரேலியாவுடன் இருக்கும் நெருக்கமான உறவுகள் பற்றி விசாரிக்கப்பட்டுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு முதல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்களில் பலர் சட்டத்தரணிகளின் அணுகலுடனோ அல்லது சாதாரண விதிமுறைகளின் அடிப்படையிலோ அணுகப்படவில்லை.

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், பாலியல் வன்முறைகளில் இந்த அறிக்கையானது சிறிய மாதிரி மாத்திரமே என யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகம் தற்போதே செயற்பட வேண்டும். இல்லையெனில் இவ்வாறான அட்டூழியங்கள் மோதலுக்கு பின்னரான இலங்கையில் வரையறையின்றி தொடரும் என்றும் சூகா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்