Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கைக்கு எதிரான பிரேரணை 28ம் திகதி வாக்கெடுப்புஇலங்கைக்கு எதிரான பிரேரணை 28ம் திகதி வாக்கெடுப்பு

இலங்கைக்கு எதிரான பிரேரணை 28ம் திகதி வாக்கெடுப்புஇலங்கைக்கு எதிரான பிரேரணை 28ம் திகதி வாக்கெடுப்பு

1 minutes read

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பாக தயாரித்த அறிக்கை எதிர்வரும் 26ம் திகதி புதன்கிழமை ஜெனீவா மனித உரிமையாளர் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மூன்று தடவைகள் திருத்தத்துக்குள்ளான இந்த பிரேரணையில் இலங்கைக்கு எதிராகவும் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற சரத்தும் சேர்க்கப்பட்டுள்ளதா  என தெரியவரவுள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டு 28ம் திகதி பிரேரணை மீது வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு எதிரான இப்பிரேரணைக்கு அமெரிக்கா பிரிட்டன் அதேபோன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளன. கடந்த வருடம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளித்து 25 நாடுகள் இம்முறையும் இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்குமென அமெரிக்கா தெரிவிக்கின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More