ஒபாமாவுக்கே அதிர்ச்சி கொடுத்த ரஷ்ய தொழிலதிபர்.ஒபாமாவுக்கே அதிர்ச்சி கொடுத்த ரஷ்ய தொழிலதிபர்.

உக்ரைன் நாட்டில் ரஷ்ய அதிபர் புதின் எடுத்த அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, பதிலடியாக ரஷ்யாவில் உள்ள பில்லினியர் தொழிலதிபர்களுக்கு தனி நபர் பொருளாதார தடை விதிக்க முடிவு செய்தார்.

நேற்று முன் தினம் ஒரு சில ரஷ்ய தொழிலதிபர்களை குறிவைத்து அவர்களுடைய சொத்துக்களை முடக்கவும், வங்கிகணக்குகளை செயலிழக்க வைக்கவும் ஒபாமா அதிரடியாக முடிவுச் செய்தார்.

ஆனால் இதை ரகசியமாக எப்படியோ தெரிந்து கொண்ட ரஷ்ய தொழிலதிபர் Gennady Timchenko என்பவர் தடை விதிப்பதற்கு முந்தைய நாள் அதாவது புதன்கிழமை அன்றே தனது சொத்துக்கள் அனைத்தையும் அதாவது 43 சதவிகித பங்குகளை தனது தொழில் பார்ட்னருக்கு விற்றுவிட்டார்.

இதனால் அவருடைய மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் காப்பாற்றப்பட்டது. இவர் ஒருவரை தவிர மற்ற ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது. இந்த ரகசியத்தை கசியவிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

120117_obama_lede_reut_328

ஆசிரியர்