16 மணி நேரம் கேம்ஸ் விளையாடிய சிறுவன் உயிர் ஊசல்.16 மணி நேரம் கேம்ஸ் விளையாடிய சிறுவன் உயிர் ஊசல்.

நார்வே நாட்டில் 14 வயது சிறுவன் ஒருவன் தொடர்ச்சியாக 14 மணிநேரம் வீடியோ கேம்ஸ் விளையாடியுள்ளான். இந்த இடைவெளியில் அவன் சுமார் 4 லிட்டர் எனர்ஜி டிரிங்ஸ் குடித்துள்ளான். தற்போது அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கோமா நிலையில் இருக்கின்றான் என்பதுதான் அதிர்ச்சிகரமான செய்தி.

Henrik Eide Dahl, என்ற நார்வே நாட்டு 14 வயது சிறுவன், பள்ளியில் நடக்கும் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு, வீடியோ கேம்ஸ் விளையாட சென்றுவிட்டான். தொடர்ச்சியாக 14 மணிநேரம் தனது நண்பன் ஒருவன் வீட்டில் வீடியோ கேம்ஸ் விளையாடியுள்ளான். இடையிடையே தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த எனர்ஜி டிரிங்க்ஸை குடித்துள்ளான். பின்னர் அந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்ததால், அவனை அவனுடைய நண்பன் மருத்துவமனையில் சேர்த்துள்ளான்.

அவன் குடித்த எனர்ஜி டிரிங்ஸ் 168.4 அவுன்ஸ் ரெட் புல்லுக்கு சமமானது என்றும், அதனால் அவனுடைய இதயம், கிட்னி, நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் உடனடியாக பாதிப்பு அடைந்ததால், தற்போது கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

Henrik Eide Dahl, என்ற சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர் Anne Katherine Duns, சிறுவன் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்றும் அவனுடைய முக்கிய உறுப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயல் இழந்ததால், அவன் தன்னுடைய இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருப்பதாகவும், கூறினார். அவனை பிழைக்க வைக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

ஆசிரியர்