எல்லை தாண்டிய சிரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது துருக்கி.எல்லை தாண்டிய சிரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது துருக்கி.

சிரிய நாட்டு விமானம் ஒன்று துருக்கியில் அனுமதியின்றி எல்லை தாண்டி பறந்து சென்றதால் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்துமாறு துருக்கி பிரதமர் உத்தரவிட்டதால், சிரிய விமானம் வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பெரும் பதட்டத்தை உண்டாக்கியுள்ளது.

துருக்கி பிரதமர் Recep Tayyip Erdogan அவர்கள் இந்த தகவலை நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசும்போது தெரிவித்தார்.

நேற்று மாலை சிரியா நாட்டு உளவு விமானம் ஒன்று துருக்கியின் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்தது. துருக்கியின் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்த விமானத்தின் பைலட்டுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் விமானியிடம் இருந்து எவ்வித பதிலும் வராத காரணத்தால் உடனே அந்த விமானத்தை சுட்டுவீழ்த்துமாறு துருக்கி பிரதமர் Recep Tayyip Erdogan அவர்கள் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சிரியாவின் மர்ம விமானம் வீழ்த்தப்பட்டது.

மேலும் எதிர்வரும் காலங்கள் சிரிய விமானங்கள் எல்லை தாண்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் Recep Tayyip Erdogan எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு சிரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்