March 24, 2023 4:52 pm

ஒரே நாளில் அதிக தூக்கு தண்டனை எகிப்தில் இடம்பெற்றுள்ளது. ஒரே நாளில் அதிக தூக்கு தண்டனை எகிப்தில் இடம்பெற்றுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எகிப்து நாட்டில் இஸ்லாமிய தலைவர் முகம்மது மோர்சியின் ஆதரவாளர்கள் நாட்டில் குழப்பம் விளைவித்ததாகவும், காவல்நிலையங்களை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு 529 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் எகிப்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

வெறும் இரண்டே வாய்தாக்களில் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளது எகிப்து நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் வழக்காட அனுமதி வழங்கப்படவே இல்லை. அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடி முடித்தவுடன் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் நீதிமன்றத்திற்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் நீதிபதியின் தீர்ப்பை கேட்ட குற்றவாளிகளின் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே கதறி அழுத காட்சி காண்போர் கண்களில் வரவழைக்கும்படி இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோர்சி ஆதரவாளர்கள் தலைநகர் கெய்ரோவில் பெரும் போராட்டம் நடத்தியபோது ஏற்பட்ட வன்முறை கைது செய்யப்பட்டவர்களே தற்போது தண்டனை பெற்றுள்ளார்கள்.

இந்த வழக்கில் இருந்து 16 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் மிக அதிகளவிலான நபர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது உலகிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்