ஜெனரேட்டர் பழுதினால் மலேசிய விமானம் ஹாங்காங்கில் தரையிறக்கம்ஜெனரேட்டர் பழுதினால் மலேசிய விமானம் ஹாங்காங்கில் தரையிறக்கம்

மலேசிய விமானம் ஒன்று இன்று காலை அதனுள் இருந்த ஜெனரேட்டர் திடீரென வேலை செய்யாத காரணத்தால் ஹாங்காங்கில் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சியோல் நகருக்கு செல்ல MH066  என்ற விமானம் கிளம்பியது. அந்த விமானத்தில் 271 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர். விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் திடீரென விமானத்திற்கு மின்சாரம் கொடுத்துக்கொண்டிருந்த ஜெனரேட்டர் திடீரென பழுதடைந்தது. மாற்று ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தடையின்றி விமானத்திற்கு வந்தாலும், உடனே விமானத்தை தரையிறக்க விமானி முடிவு செய்தார்.

அதன் பின்னர் ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தில் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் சியோல் நகருக்கு பயணப்பட்டனர்.

article-2587692-1C87672E00000578-198_634x520

ஆசிரியர்