வெட்டப்பட்ட மரம் அந்தரத்தில் தொங்கும் அதிசயம் வெட்டப்பட்ட மரம் அந்தரத்தில் தொங்கும் அதிசயம்

இந்த மரத்தை உற்றுப்பாருங்கள். அந்தரத்தில் நிற்பது போல் தோன்றுகிறதுதானே? இந்த மரத்தை நேரிலும், புகைப்படத்திலும் பார்ப்பவர்கள் முதலில் அதிர்ந்துவிட்டார்கள். காரணம் வெட்டப்பட்ட மரம் எப்படி அந்தரத்தில் நிற்கும் என்று. ஆனால் அந்த மரத்தின் வெட்டப்பட்டது போல் காணப்படும் பகுதியை சற்று உற்று நோக்கினால் உங்களுக்கு தெரிவது ஒரு தேர்ந்தெடுத்த கலைஞனின் ஓவியம் என்று.

ஆமாம் வெட்டப்பட்ட இடத்தில் இருப்பதுபோல் தெரியும் இடத்தில் மிக அற்புதமாக அந்த இடத்தின் பின்னணியை ஓவியமாக வரைந்துள்ளார் ஒரு அற்புதமான ஓவியக்கலைஞர். இந்த மரம் ஜெர்மனியில் உள்ள Potsdam என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் உள்ள அற்புதமான ஓவியத்தை வரைந்தவர் Daniel Siering மற்றும் Mario Schuster என்ற இரண்டு ஓவியர்கள். அவர்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றது.

1395761358155_wps_tree_floating_in_the_air_

ஆசிரியர்