ஒரு செங்கல்லினால் நடந்த விபரீதம்ஒரு செங்கல்லினால் நடந்த விபரீதம்

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பகுதியில் பழைய வீடு ஒன்றினை பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரே ஒரு செங்கலை அகற்றியதால் அந்த இரண்டு மாடி வீடு முழுவதும் திடீரென நிலைகுலைந்து விழுந்த அதிசய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள Manchester என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பராமரிப்பு வேலையை ஊழியர் ஒருவர் கிரேனில் நின்றபடி செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் ஒரே ஒரு செங்கலை அகற்றுவதற்கு சிறிய அளவில் கடப்பாறையை வைத்து லேசாக இடித்தார். அந்த சமயத்தில் திடீரென அந்த இரண்டு மாடி கட்டிடம் முழ்வதும் இடிந்து தரைமட்டமாகிவிட்டது. இதனால் அந்த பராமரிப்பு ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். பழம்பெரும் கவிஞர் ஒருவரின் வீடு இது. இந்த வீட்டின் உரிமையாளர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த் வீடு இடிந்துவிழும் காட்சி தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. download download (1)

ஆசிரியர்