வேட்பாளருக்கே போதிய பாதுகாப்பு இல்லை என்றால்!!வேட்பாளருக்கே போதிய பாதுகாப்பு இல்லை என்றால்!!

நடிகை நக்மா தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போதெல்லாம் பாலியல் தொல்லைக்கு ஆளாவது கட்சி மேலிடத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகை நக்மா பாராளுமன்ற தேர்தலில் டிக்கெட் வாங்கியதில் இருந்து தற்பொழுது தேர்தல் பிரச்சாரம் செய்தது வரை கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

நக்மா தேர்தலில் போட்டியிடப்போவதாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அறிவிக்கும் போது உடன் இருபுறமும் இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நக்மாவை உரசி பாலியல் தொல்லை கொடுத்தனர். இந்த விஷயம் பெரிய அளவில் பேசப்படவில்லை. பின்பு திறந்தவெளி காரில் பிரசாரத்தில் ஈடுபடும் போது அவரது ரசிகர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நக்மாவின் கையை பற்றி கொண்டு முத்தமிட்டுள்ளனர்.

அதன் பிறகு நேற்று முன் தினம் ஹாபுர் தொகுதி எம்.எல்.ஏ. காஜ்ராஜ் சர்மா, நடிகை நக்மாவுக்கு பொது இடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் முத்தமிட்டு பலத்த சர்ச்சையை உண்டாக்கினார். இந்த காட்சி அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் இணையங்களில் வெளியாகி பரபப்பாக பேசப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது, 20வதுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கும்பலாக வந்து நடிகை நக்மாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு பாதுகாவலர்கள் அவரை தொண்டர்களிடம் இருந்து மீட்டு காரில் அனுப்பியுள்ளனர்.

இதை ஒருவர் புகைப்படமெடுத்து இணையத்தில் விட்டும் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கே போதிய பாதுகாப்பு இல்லை என்று பெண்கள் அமைப்பினர் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சி செய்தால், கட்டாயம் நாட்டில் குற்ற செயல்கள் பெருகும் என கூறியுள்ளனர்.

nagma_PTINagma_assault240

ஆசிரியர்