பைலட் வீட்டில் ஹார்ட் டிஸ்க்கை கைப்பற்றியது FBI. பைலட் வீட்டில் ஹார்ட் டிஸ்க்கை கைப்பற்றியது FBI.

அமெரிக்காவின்  Federal Bureau of Investigation என்ற FBI அமைப்பிடம் மலேசிய அரசு, மறைந்த விமானம் MH370  குறித்த விசாரணைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

மலேசிய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கிய  FBI  உடனடியாக விசாரணை செய்ய களத்தில் இறங்கியது. முதல்கட்டமாக விமானத்தின் பைலட் வீட்டில் அதிநவீன கருவிகள் மூலம் சோதனை செய்த  FBI , முக்கிய ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றியுள்ளது. இதில் விமானம் குறித்து பல விடைதெரியாத கேள்விகளுக்கு பதில் இருக்கலாம் என கருதபப்டுகிறது.

இந்நிலையில் சீன அரசு அனுப்பிய ஐந்து கப்பல்கள் விமானத்தின் பாகங்கள் விழுந்த இடத்தை சென்று மிதந்து கொண்டிருக்கும் பொருட்களை கைப்பற்றியுள்ளது.

மேலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மீட்புப்படையினர்களும் MH370 விமானம் விழுந்ததாக கருதப்படும் இடத்தை நோக்கி சென்றடைந்துவிட்டது. அவர்கள் பல கலர்களை சேர்ந்த மிதக்கும் பொருட்களை மீட்டுள்ளனர். இந்த பொருட்கள் எல்லாம் விமானத்தின் பாகங்கள்தானா என்பது குறித்து சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Malaysia Flight MH370

ஆசிரியர்