தண்ணீர் கொண்டு சென்ற மாணவி கைதுதண்ணீர் கொண்டு சென்ற மாணவி கைது

காலியான பீர் பாட்டிலில் குடிதண்ணீர் கொண்டு சென்ற விர்ஜினியா பல்கலைக்கழக மாணவி ஒருவரை போலீஸார் தவறாக கைது செய்தனர். அதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி, போலீஸார் மீது $40 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விர்ஜினியா பல்கலைகழக மாணவி Elizabeth K. Daly. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் Charlottesville supermarket என்ற சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிவிட்டு காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது காரை நிறுத்திய சோதனை செய்த போலீஸார், அவர் பீர் பாட்டிலை காரினுள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

விர்ஜினியா மாகாண சட்டப்படி பீர் பாட்டில்களை வாங்கும் வயதை அந்த மாணவி இன்னும் அடையவில்லை என்பதால் அவரை கைது செய்தனர். ஆனால் உண்மையில் அவர் காலியான பீர் பாட்டிலில் குடிதண்ணீரைத்தான் நிரப்பி வைத்திருந்தார். அவர் அதை எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் அவர் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் பீர் பாட்டில் சோதனைக்கு அனுப்பி வைக்கபட்டது.

சோதனையில் அந்த பாட்டிலில் பீர் இல்லை என்றும், வெறும் தண்ணீர்தான் இருந்தது என்றும் தெரியவந்தது. அதன்பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற போலீஸார் மாணவியை விடுதலை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவி Elizabeth K. Daly, தன்னுடைய வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து தன்னை கைது செய்த போலீஸார் மீது $40 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆசிரியர்