பிரிட்டன் தொழிலதிபர் வைர கைக்கடிகாரம் தயாரித்து சாதனை . பிரிட்டன் தொழிலதிபர் வைர கைக்கடிகாரம் தயாரித்து சாதனை .

$55 மில்லியன் மதிப்பில் கைக்கடிகாரம் ஒன்றை தயார் செய்து பிரிட்டன் நகைக்கடைக்காரர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார். இதுதான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடிகாரம் என்று கூறப்படுகிறது. இந்த கைக்கடிகாரத்தில் 110 காரட் மதிப்புள்ள வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

Hallucination என்ற பெயரை உடைய இந்த வாட்ச், மிகவும் அரியவகை வைரங்களால் செய்யப்பட்டுள்ளது. இதை செய்வதற்காக டிசைனர்களும், நகை வடிவமைப்பாளர்களும், ஆறு மாத காலம் எடுத்துக்கொண்டனர். இந்த கைக்கடிகாரத்தின் செய்த நிறுவனத்தின் உரிமையாளர் Lawrence Graff செய்தியாளர்களிடம் கூறியபோது, முழுக்க முழுக்க வைரங்களை மட்டுமே வைத்து ஒரு கைக்கடிகாரம் செய்ய வேண்டும் என்பது தனது பல ஆண்டு கனவு என்றும், இதற்காகவே பல ஆண்டுகளாக அரியவகை வைரங்களை சேர்த்து வந்ததாகவும், தன்னுடைய கனவு தற்போதுதான் நிறைவேறியது என்றும் தெரிவித்தார்.

இந்த கைக்கடிகாரம் சுவிட்சர்லாந்தில் இன்று (30.03.2014) நடைபெறும் உலகின் மிகப்பெரிய தொழில் வர்த்தக கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது. இந்த கைக்கடிகாரத்தின் விலை கரீபியன் தீவின் மதிப்பை விட விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ImageGen

ஆசிரியர்