ஓர் விஞ்ஞானி உள்ளிட்ட 3 விண்வெளி வீரர்கள் சோயுஸில்ஓர் விஞ்ஞானி உள்ளிட்ட 3 விண்வெளி வீரர்கள் சோயுஸில்

நாசா விஞ்ஞானி ஒருவர் உள்ளிட்ட 3 விண்வெளி வீரர்களை கொண்ட ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்துள்ளது.

தொழினுட்ப பிரச்சினை காரணமாக அதன் பயணம் இரண்டு தினங்கள் தாமதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சோயுஸ் விண்கலத்திற்கு பூமியை சுற்றி மேலதிகமாக 30 தடவைகள் சுழல வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று விண்வெளியை அடைந்த 3 விஞ்ஞானிகளும், ஏற்கனவே அங்குள்ள அமெரிக்க, ஜப்பான், மற்றும் ரஷ்யா விண்வெளி வீரர்களுடன் இணைந்து செயற்படவுள்ளனர்.

அவர்கள் எதிர்வரும் ஒன்றரை மாத காலத்திற்கு விண்வெளியில் தங்கியிருந்து பணியாற்றவுள்ளனர்.

beforehatchclosure

download

ஆசிரியர்