செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாப் இசைப் பாடகி ஷகிரா ஃபேஸ்புக்கில் புதிய சாதனை பாப் இசைப் பாடகி ஷகிரா ஃபேஸ்புக்கில் புதிய சாதனை

பாப் இசைப் பாடகி ஷகிரா ஃபேஸ்புக்கில் புதிய சாதனை பாப் இசைப் பாடகி ஷகிரா ஃபேஸ்புக்கில் புதிய சாதனை

1 minutes read

பிரபல பாப் இசைப் பாடகி ஷகிரா ஃபேஸ்புக்கில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். அவரதுஅதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் 10 கோடி ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பிரபலம் ஒருவரின் ஃபேஸ்புக் பக்கம் இவ்வளவு லைக் பெறுவது இதுவே முதன்முறை.

இது குறித்து பத்திரிக்கைகளிடம் பேசிய ஷகிரா, “இந்த மைல் கல்லை எட்டியதை நான் பெரிய கவுரவமாக நினைக்கிறேன். சமூக ஊடகங்கள், குறிப்பாக, ஃபேஸ்புக், என்னைப் போன்ற பல கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் நடுவே இருந்த இடைவெளியைக் நிரப்பியுள்ளது” என்றார்.

இதோடு, இதுவரை ஃபேஸ்புக்கில் தனது மறக்க முடியாத தருணங்களைப் பற்றிய வீடியோ ஒன்றையும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஷகிரா பதிவேற்றியுள்ளார்.

இந்த சாதனையையொட்டி, ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பெர்க், ஷகிராவின் பக்கத்தில் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவைச் சேர்ந்த பாடகியான ஷகிரா, பல பாப் பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். முக்கியமாக, சென்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக இவர் பாடிய ‘வாகா வாகா’ பாடல் உலக அளவில் மிகப் பிரபலமானது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More