செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வெடிகுண்டு மிரட்டல் சிட்னி “ஓபரா’ அரங்குக்கு | சமூக வலைதளத்தில் தகவல்வெடிகுண்டு மிரட்டல் சிட்னி “ஓபரா’ அரங்குக்கு | சமூக வலைதளத்தில் தகவல்

வெடிகுண்டு மிரட்டல் சிட்னி “ஓபரா’ அரங்குக்கு | சமூக வலைதளத்தில் தகவல்வெடிகுண்டு மிரட்டல் சிட்னி “ஓபரா’ அரங்குக்கு | சமூக வலைதளத்தில் தகவல்

1 minutes read

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ் பெற்ற “ஓபரா’ அரங்கு அமைந்துள்ள பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியானதையடுத்து, அந்த இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

சிட்னி “ஓபரா’ அரங்கம், அதையொட்டிய மேன்லி சொகுசுப் படகுத் துறை ஆகியவை அந்த நாட்டின் முக்கியச் சுற்றுலா இடங்களாகும்.

இந்த நிலையில், சொகுசுப் படகில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக, சமூக வலைதளத்தில் வியாழக்கிழமை தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போலீஸார் அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்களை வெளியேறச் செய்தனர்.

“ஓபரா’ அரங்கம் பகுதியிலிருந்தும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

சமூக வலைதளம் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உண்மையே என்று சிட்னி நகரம் அமைந்துள்ள நியூ செளத் வேல்ஸ் மாகாண காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அந்தத் தகவல் வெளியானதும், அந்தப் பகுதியிலிருந்து உடனடியாகப் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, போலீஸாரும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் மர்மப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்றார்.

“ஓபரா’ அரங்கில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

எனினும், அரங்கின் உள்ளே சில பணியாளர்கள் இருந்தனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

சிட்னியில் மற்றொரு பெரிய சுற்றுலா ஈர்ப்பான சொகுசுப் படகுப் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது.

போலீஸாரின் தேடுதல் நடவடிக்கை முடிவுற்றதும் அந்தப் பகுதிக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று போலீஸார் அறிவித்தனர்.

“ஓபரா’ அரங்கு மற்றும் மேன்லி சொகுசுப் படகுத் துறை ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.