0
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண தலைவர் நவாப் அக்பர் கான் புக்தி கொலை வழக்கில் இருந்து முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் விடுவிக்கப்பட்டுள்ளார். 2006ம் ஆண்டு, பழங்குடியின பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் புக்தி பலியானார். அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் பர்வேஷ் முஷாரப் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.